சொற்பமான தொகையை தீபாவளி போனசாக வழங்கியதை அடுத்து ஆக்ரா-லக்னோ எக்ஸ்பிரஸ் வே சுங்கச்சாவடி ஊழியர்கள் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்காமல் இலவசமாக அனுமதித்த சம்பவம் நடந்துள்ளது. பத்தேஹாபாத் சுங்கச்சாவடியில் பணியாற்றும் 21 ஊழியர்கள், தங்களுக்கு வெறும் 1100 ரூபாய் மட்டுமே தீபாவளி போனசாக வழங்கப்பட்டதால் கடும் அதிருப்தியில் இருந்தனர். தங்களது அதிருப்தியை வெளிக்காட்டும் விதமாக சுங்கச்சாவடியை கடந்த அனைத்து வாகனங்களையும் இலவசமாக செல்ல அவர்கள் அனுமதித்தனர். இதனால் சுங்கச்சாவடியின் இயல்பான நடவடிக்கை முடங்கியதுடன் போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் கடந்த தை அறிந்த சுங்கச்சாவடி ஒப்பந்த நிறுவனம் வேறு சுங்கச்சாவடிகளில் இருந்து பணியாளர்களை கொண்டு வந்ததாக தெரிகிறது.