ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கக்கோரி முதலமைச்சர் உமர் அப்துல்லா தலைமையில் கூடிய முதல் அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்துடன் டெல்லி சென்று அவர் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கையை வலியுறுத்த உள்ளார்.