டெல்லி செங்கோட்டை இன்று முதல் வழக்கம்போல் செயல்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், தலைநகரம் முழுவதும் பாதுகாப்பும், கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டது. சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பதற்றமான சூழலுக்கு மத்தியில் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த செங்கோட்டை இன்று முதல் பார்வையாளர்களின் செயல்பாட்டுக்கு வருகிறது.