மத்திய பிரதேசத்தில் ரோந்துப்பணிக்கு சென்ற காவல்துறையினரின் ஜீப்பில் இருந்து, ராட்சத மலைப்பாம்பு வெளியே வந்த வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது. ஜீப்பின் அடியில் இருந்து மெதுவாக வெளியேறிய பாம்பு, அருகிலிருந்த வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இதனை பார்த்த போலீசார் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.