பாகிஸ்தானுக்கு செல்லும் செனாப் நதி நீரை நிறுத்தி, ரத்தமும் நீரும் ஒன்றாக பாயாது என்று கூறிய பிரதமரின் பேச்சை மேற்கோள் காட்டிய மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, ஒரே நேரத்தில் இரு நாடுகளுக்கிடையே போரும், கிரிக்கெட் விளையாட்டும் எப்படி நடைபெறும் என கேள்வி கேட்டு விமர்சித்தார். கிரிக்கெட் வாரியம் தேசப்பற்றில் வியாபாரம் செய்வதாக குற்றம் சாட்டிய அவர், அரபு நாட்டில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுவது பணத்திற்காக மட்டுமே என்றும் விமர்சனம் செய்தார்.