பெங்களூரு வந்தே பாரத் ரெயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால், பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தார்வாரில் இருந்து பெங்களூருவுக்கு வந்த வந்தேபாரத் ரெயில், தாவணகெரே அருகே வந்தபோது சக்கரங்களில் கரும்புகை வெளியேறியதை பார்த்து, ரெயில்வே கிராசிங் ஊழியர் உடனடியாக என்ஜின் ஓட்டுநர்களுக்கு தகவல் அளித்தார். அதையடுத்து ஓட்டுநர்கள் உடனே ரெயிலை நிறுத்தினர். ரயிலில் கரும்புகை வெளியேறியதை பார்த்து, பயணிகள் அலறியடித்துக் கொண்டு கீழே இறங்கினர். தகவலறிந்து வந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தீயை உடனே அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரெயில் சக்கரங்களில் ஏற்பட்ட உராய்வு காரணமாக தீப்பிடித்து எரிந்திருக்கலாம் என கூறப்படுகிறது.