இந்தியாவில் கோடீஸ்வர குடும்பங்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 70 ஆயிரமாக உயர்ந்துள்ளதாகவும், இதில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது என்றும் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. 2021ம் ஆண்டில் 4 லட்சத்து 58 ஆயிரமாக இருந்த கோடீஸ்வர குடும்பங்களின் எண்ணிக்கை, 2025ம் ஆண்டில் 90 சதவீதம் அதிகரித்துள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் ஹுருன் இந்தியா குறியீடு, ஆடம்பர நுகர்வோர் கணக்கெடுப்பு வெளியிட்ட அறிக்கையில், 1 லட்சத்து 78 ஆயிரம் கோடீஸ்வர குடும்பங்களைக் கொண்ட மாநிலமாக மஹாராஷ்டிரா முன்னணியில் உள்ளது. அதை தொடர்ந்து 79,800 கோடீஸ்வர குடும்பங்களுடன் டெல்லி 2வது இடத்திலும், 72,600 கோடீஸ்வர குடும்பங்களுடன் தமிழகம் 3வது இடத்திலும் உள்ளது.