மாநிலங்களவையில் பாஜக எம்.பி.க்களின் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது. 2022-ம் ஆண்டுக்கு பிறகு, பாஜக எம்பிக்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியது இதுவே முதல்முறையாகும். ராஜ்யசபா எம்.பி.க்களாக பதவியேற்ற பிரபல வழக்கறிஞர் உஜ்வால் நிகம், சமூக சேவகர் சதானந்தன் மாஸ்டர், முன்னாள் வெளியுறவு செயலர் ஹர்ஷவர்தன் ஷ்ரிங்லா ஆகியோர் பாஜகவில் இணைந்ததன் மூலம் அக்கட்சியின் எண்ணிக்கை 102- ஆக உயர்ந்தது.