டெல்லி பழைய ரயில் நிலையத்தின் பெயரை மாற்றம் செய்ய அம்மாநில முதலமைச்சர் ரேகா குப்தா மத்திய ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 1864ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியின் Chandni Chowk பகுதியில் கட்டப்பட்ட இந்த ரயில் நிலையத்துக்கு அரசர் மகராஜா அக்ரசென் பெயரை வைக்க அக்கடிதத்தில் அவர் வலியுறுத்தினார். இதன் மூலம் இந்தியாவின் சமூக பொருளாதார வளர்ச்சியில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி பெரும் பங்களிப்பை ஆற்றிய மகராஜா அக்ரசெனுக்கான அஞ்சலியாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.