ஆந்திர மாநிலம் சித்தூர் முன்னாள் மேயர் தம்பதி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2015-ம் ஆண்டு சித்தூர் மேயராக இருந்த அனுராதாவை அவரது அலுவலகத்திற்குள் புகுந்த கும்பல் துப்பாக்கியால் சுட்டு கொன்றது. பின்னர் அவருடைய கணவர் கட்டாரி மோகனை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்யப்பட்டு சித்தூர் 9-வது கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.