பீகாரில் கொலை வழக்கில் கைதான ஆளும் கட்சி எம்.எல்.ஏ. மருத்துவமனைக்குள் புகைப்பிடித்தபடி சென்ற வீடியோ வெளியாகி உள்ளது. முதலமைச்சர் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ அனந்த் சிங், கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை, மருத்துவ பரிசோதனைக்காக பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸார் அழைத்து சென்ற போது, ஆளுங்கட்சி எம்எல்ஏ அதிகார திமிருடன் புகைபிடித்தபடியே நடந்து சென்றார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.இதையும் படியுங்கள் : சொத்தை கேட்டு சண்டையிட்ட மகன்