கேரளாவில் குட்டி யானையை வனத்துறையினர் 5 மணிநேரம் போராடி தாய் யானையுடன் சேர்த்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வயநாடு மாவட்டம் புல்புள்ளி கிராமத்தில் தாயை பிரிந்த குட்டி யானை பள்ளிக்குள் நுழைந்து, அங்கேயே சுற்றித் திரிந்தது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானை குட்டியை, வனத்துக்குள் சென்று தாயுடன் சேர்த்து விட்டனர்.