சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் இனி நாசாவின் கைகளில் இல்லை என இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார். நாம் அடுத்த விண்வெளி ஆய்வு மையத்தை அமைப்பதற்கான முன்னோட்டத்தை அடுத்த 5 ஆண்டுகளில் நடத்தப்போவதாக கூறியவர், இந்தியாவில் வருடத்திற்கு 10 லட்சம் பொறியாளர்கள் உருவாகுவதாகவும், அதில் 17 சதவீத பொறியாளர்களை உருவாக்கக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக கூறினார்.