பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால், வேலைவாய்ப்புகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய பொருளாதார விவகாரத்துறை தனது மாதாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது. மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்த துறை, தற்போது செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியானது, வேலைவாய்ப்புகளை கடுமையாக பாதிக்கத் துவக்கி உள்ளதாகவும், எனவே இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர் சேவை உள்ளிட்ட துறைகள், செயற்கை நுண்ணறிவின் காரணமாக தானியங்கி முறைக்கு மாறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.