உத்தரகாண்ட் மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. உத்தரகாண்ட் குப்த்காஷியில் இருந்து கேதார்நாத்துக்கு 7 பேருடன் சென்ற ஆர்யன் ஏவியேஷன் நிறுவனத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர், கௌரிகுண்ட் வனப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் பாதையை இழந்ததாக கூறப்படும் நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் தேடுதல் பணியை துரிதப்படுத்தி உள்ளனர்.