ராஜஸ்தானில் மசூதி அருகே தள்ளுவண்டி கடை மீது காரை மோதியதற்காக 20க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பலால் சரமாரியாக தாக்கப்பட்ட மாற்றுத்திறனாளி இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாற்றுத்திறனாளியான சீதாராம், தனது நண்பர்களான சிக்கந்தர், தில்குஷ் மற்றும் தீபக் ஆகியோருடன் காரில் சென்ற போது, எதிர்பாராத விதமாக மசூதி ஒன்றின் அருகே தள்ளுவண்டி மீது கார் மோதியது. உடனடியாக காரை சூழ்ந்து கொண்ட கும்பல், சேதத்திற்கு இழப்பீடு தருவதாக கூறியும் கேட்காமல் காரில் இருந்தவர்களை சரமாரியாக தாக்கினர். அதில் சீதாராம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து மதரீதியிலான பதற்றம் உருவானதால், மசூதியை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.