இந்திய கடற்படை போர் விமானங்களை இயக்க பயிற்சி பெறும் முதல் பெண் அதிகாரி என்ற பெருமையை சப் லெப்டினன்ட் அஸ்தா பூனியா பெற்றுள்ளார். இதன் மூலம் அவர், எதிர்காலத்தில் கடற்படையின் ரபேல் போர் விமானங்களில் பறக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி, Wings Of Gold என்ற பெருமை மிகு விருதையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.