நாட்டிலேயே முதல்முறையாக ரயிலுக்குள் ஏடிஎம் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் மும்பை - நாசிக் இடையே இயக்கப்படும் பஞ்சவட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏடிஎம் இயந்திரம் சோதனை முயற்சியாக நிறுவப்பட்டுள்ளது. தனியார் வங்கியால் வழங்கப்பட்ட இந்த ஏடிஎம் இயந்திரம் சொகுசு இருக்கை வசதி கொண்ட ஏ.சி.பெட்டியில் நிறுவப்பட்டுள்ளது. இது பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில் சோதனை முயற்சி வெற்றி பெற்றால் மற்ற ரயில்களிலும் இதேபோன்ற வசதியை பயணிகள் எதிர்பார்க்கலாம்.