ரயில்களில் பயணம் செய்வதற்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு விதிமுறைகளில் மாற்றம் செய்து இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, டிக்கெட் முன்பதிவு தொடங்கிய முதல் 15 நிமிடங்களுக்கு, IRCTC இணையதளம் அல்லது ஆப் மூலம் ஆதார் அங்கீகாரம் செய்த பயனர்கள் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என தெரிவித்துள்ளது. இந்த நேரத்தில் டிக்கெட் முன்பதிவு ஏஜென்சிஸ் மற்றும் ஆதார் ஆங்கீகாரம் செய்யாத பயணிகள் முன்பதிவு செய்ய முடியாது. இந்த நடைமுறை தற்போது தட்கலில் மட்டும் இருந்து வரும் நிலையில் அக்டோபர் 1 முதல் பொது டிக்கெட் முன்பதிலும் நடைமுறைக்கு வரும் என தெரிவித்துள்ளது.