உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சாகர் மாவட்டத்தில் சிறிய இனிப்பு கடை நடத்தி வரும் நபருக்கு 141 கோடி ரூபாய் வருமான வரி கட்டுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பதறிப்போன அவர் போலீசில் புகாரளித்தார். விசாரணையில் டெல்லியை சேர்ந்த தனியார் நிறுவனம் அவரின் பான், ஆதார் அட்டையை திருட்டுத்தனமாக பயன்படுத்தியது தெரிய வந்தது.