இந்திய தேர்தல் ஆணையம் மோடி அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருவதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து நாட்டின் ஏழைகள், பட்டியலின மக்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரின் வாக்களிக்கும் உரிமையை பறிக்க மத்திய அரசு சதி செய்வதாக கூறினார். பீகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து ஒரு கோடி வாக்காளர்கள் வரை நீக்கப்பட்டிருப்பது தற்செயலான நிகழ்வு அல்ல எனக் கூறிய கார்கே, வாக்காளர் பட்டியலில் இருந்து வேண்டுமென்றே தேர்தல் ஆணையம் பெயர்களை நீக்கி வருவதாக கூறினார்.