நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது. நவம்பர் 15 ஆம் தேதியுடன் முடிந்த வாரத்தில் அன்னிய செலாவணி கையிருப்பு மேலும் 17 புள்ளி எட்டு பில்லியன் டாலர் குறைந்து,கையிருப்பு 657 புள்ளி 89 பில்லியன் ஆக சரிந்தது.கடந்த ஆறு வாரங்களில் நமது அன்னிய செரலாவணி கையிருப்பு 30 பில்லியன் டாலர்கள் என்ற அளவுக்கு குறைந்துள்ளது. டாலரின் மதிப்பு அதிகரித்து வருவதாலும், இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதாலும் நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு சரிந்துள்ளதை ரிசர்வ் வங்கியின் தரவுகள் வெளிக்காட்டுகின்றன.