கடந்த 13 ஆம் தேதி நிலவரப்படி இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு 698 புள்ளி 9 பில்லியன் டாலர் என்ற அளவில் உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அன்னிய செலாவணி கையிருப்பு 2 புள்ளி 3 பில்லியன் டாலர் அதிகரித்த து. இந்த நிலை நீடிக்குமானால், விரைவில் , 2024 செப்டம்பரில் எட்டியதை போல, அன்னிய செலாவணி கையிருப்பு 704 புள்ளி 89 பில்லியன் டாலர்களாக உயரும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. டாலர் அல்லாத இதர நாடுகளின் செலாவணிகளான யூரோ, பவுண்ட், நென் ஆகியன சர்வதேச சந்தையில் அதிக அளவில் புழங்குவதால், இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு அதிகரித்து வருகிறது.இதையும் படியுங்கள் : ஜூலையில் இந்தியாவில் டெஸ்லாவின் முதல் ஷோரூம்..