7ஆம் ஆண்டை கொண்டாட Astrotalk நிறுவனம் ரூ.50 கோடி வரை செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட அஸ்ட்ரோடாக் இந்தியாவின் புகழ் பெற்ற இணையவழி ஜோதிட வலைத்தளமாக உள்ளது.இதில் புகழ்பெற்ற பல ஜோசியர்களுடன் மக்கள் தங்களது பிரச்சனைகளை கூறி தீர்வு கிடைப்பதாக நம்புகின்றனர். கிட்டத்தட்ட 4 கோடி மக்கள் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி வரும் நிலையில் நிறுவனம் தொடங்கப்பட்டு 7ஆம் ஆண்டை கொண்டாடும் விதமாக ஒருநாள் ஜோசியர்களுடன் இலவசமாக மக்கள் சாட் செய்யலாம் என்று நிறுவனத்தின் சி.இ.ஓ புனித் குப்தா அறிவித்திருந்தார்.