திருமண பந்தத்தில், கட்டாய பாலியல் உறவை குற்றமாக கருத வேண்டிய அவசியமில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பான வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது பதிலளித்த மத்திய அரசு, கணவன் மனைவியை கட்டாயப்படுத்தி உறவு வைத்துக்கொள்வதை பாலியல் குற்றமாக கருதி தண்டனை அளித்தால் திருமண பந்தத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும், இதில் நீதிமன்றம் முடிவெடுக்க முடியாது, அனைத்து மாநில அரசுகளிடம் கருத்துகளை கேட்டு தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தது.