மணிப்பூர் மாநிலம் இம்பால் நகரம் முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. மாநிலத்தில் தொடர்ந்து கனமழை கொட்டி வரும் நிலையில், இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள வாங்கேய், போரோம்பட் ஆகிய இடங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.