பஞ்சாபில் உரிமைக் கோரப்படாத சடலத்தை அரசு மருத்துவமனையில் இருந்து, மாநகராட்சி குப்பை வண்டியில் வைத்து மயானத்திற்கு எடுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Phagwara ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த சடலத்தை குப்பை வண்டியில் வைத்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற மாநகராட்சி பணியாளர்கள், உறவினர்கள் யாரும் தேடி வராததால் அதே குப்பை வண்டியில் வைத்து மயானத்திற்கும் கொண்டு சென்றனர். இதனை அங்கிருந்த ஒருவர் படம்பிடித்து சமூகவலைதளங்களில் பகிந்துள்ளார். இதுகுறித்து குப்பை வண்டியின் ஓட்டுநரை கேட்ட போது, உரிமைக் கோரப்படாத சடலங்களை வழக்கமாகவே குப்பை வண்டியில் தான் எடுத்து செல்வதாக கூறியது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.