ஆபரேஷன் சிந்தூரில் வீரமரணமடைந்த ஆந்திராவை சேர்ந்த ராணுவ வீரரின் உடல் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. காளி தாண்டாவை சேர்ந்த இராணுவ வீரர் முரளி நாயக் கடந்த 9ம் தேதி பாகிஸ்தானுடன் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் உயிரிழந்தார். அவருடைய உடல் விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், அமைச்சர் நாரா லோகேஷ் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்திய நிலையில், தேசிய கொடி போர்த்தியபடி உடல் துப்பாக்கி குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.