ஆந்திராவில் நடுக்கடலில் மீன்பிடிப்பதற்காக மீனவர்கள் சென்ற விசைப்படகு திடீரென தீப்பற்றி எரிந்ததால், அதில் இருந்த மீனவர்கள் கடலில் குதித்து வேறு படகில் ஏறி உயிர் தப்பினர். விசாகப்பட்டினத்தில் இருந்து மீன்பிடிப்பதற்காக சென்ற விசைப்படகில், சமைப்பதற்காக பயன்படுத்த கூடிய சிலிண்டரில் ஏற்பட்ட கேஸ் கசிவின் காரணமாக படகு தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.