கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் விசைப்படகு கரையில் மோதியதில், அதிலிருந்த பணியாளர்கள் இருவர் காயமடைந்தனர். விழிஞ்ஞம் நோக்கிச் சென்ற பிரமாண்ட விசைப்படகு, திடீரென கரையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படகில் இருந்த பணியாளர்கள் ஐந்து பேரில் இருவர் காயமடைந்த நிலையில், அனைவரும் கயிறு மூலம் மீட்கப்பட்டனர். கடல் சீற்றம் காரணமாக விபத்து நடந்த இடத்திலிருந்து விசைப்படகை மீட்க முடியாமல் அங்குள்ளவர்கள் திணறி வருவதாக கூறப்படுகிறது.