பெங்களூருவில் அமேசானில் ஒரு லட்சத்து 86ஆயிரம் ரூபாய்க்கு ஆர்டர் செய்த செல்ஃபோனுக்கு பதிலாக டைல்ஸ் கல் வந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். பெங்களூருவை சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியரான பிரேம் ஆனந்த் என்பவர் அமேசானில் Samsung Galaxy Z Fold 7 என்ற செல்போனை ஆர்டர் செய்துள்ளார். கூரியரில் வந்த பார்சலை திறந்து பார்த்தபோது, அதில் செல்போனுக்கு பதில் டைல்ஸ் கல் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், கூரியர் ஊழியரை அழைத்தபோது அவர் பதில் அளிக்காததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பிரேம் ஆனந்த் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.