அதானிக்கு எதிராக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் தெரிவித்த குற்றச்சாட்டில் எந்த ஆதாரமும் இல்லை என பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த நிதி முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், இந்தியாவின் அதானி குழுமம் கணக்குகளில் முறைகேடு செய்து பொய்யாக வெளியிட்டு வருவதாகவும், நிறுவன கடன்களை பெருமளவு மறைத்து இருப்பதாகவும், இதனால் பங்கு சந்தையில் தனது முதலீட்டாளர்களுக்கு உண்மையான தகவல்களை மறைத்து குற்றத்தை புரிந்ததாகவும் பெரும் குற்றச்சாட்டை முன்வைத்தது. இந்தவிவகாரம் நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், நாடாளுமன்றத்திலும் எதிர்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.