ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். 'ஆப்பரேஷன் பிகாலி' என்கிற பெயரில் பயங்கரவாத சம்பவங்களில் தொடர்புடைய ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதியை ஓராண்டுக்கும் மேலாக போலீஸார் தேடி வந்தனர். இந்த சூழலில், உதம்பூர் மாவட்டம் வசந்த்கர்க் பகுதியில் அவன் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, ராணுவமும் போலீஸாரும் விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்து துப்பாக்கிச் சண்டையில், பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.இதையும் படியுங்கள் : அடுத்த வாரம் பிரேசில் செல்லும் பிரதமர் மோடி?