டெல்லி ரிதாலா மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள குடிசைப்பகுதியில் தீடீரென ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், ஒரு குழந்தை படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ரிதாலா மெட்ரோ நிலையத்திற்கும் டெல்லி ஜல் போர்டுக்கும் இடையில் அமைந்துள்ள பெங்காலி குடியிருப்பில் தீடீரென தீப்பற்றி கொளுந்துவிட்டு எரிந்த நிலையில், தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் 29 தீயணைப்பு வாகனங்கள் உதவியுடன் விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் 500க்கும் மேற்பட்ட குடிசைகள் தீப்பற்றி எரிந்தன.