பெங்களூரு விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்த இண்டிகோ விமானத்தின் மீது, டெம்போ டிராவலர் வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. கடந்த வெள்ளிக்கிழமை நண்பகல் 12.15 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், இதில் யாருக்கும் காயமேதும் ஏற்படவில்லை எனவும் விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. டெம்போ டிராவலர் ஓட்டுநர் அலட்சியமாக வாகனத்தை இயக்கியதே விபத்துக்கு காரணம் என இண்டிகோ விமான சேவை நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இண்டிகோ விமானத்தின் முகப்பு பகுதிக்கு அடியில், டெம்போ டிராவலர் வாகனம் சிக்கி சேதமடைந்து நிற்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.