தெலங்கானா மாநிலத்தில் இட ஒதுக்கீடு போராட்டம் கலவரமாக மாறியதால், அங்குள்ள கடைகள், பெட்ரோல் பம்புகள் உள்ளிட்டவை அடித்து நொறுக்கப்பட்டன. உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 42 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் அரசின் உத்தரவுக்கு தெலங்கானா உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் பிற்படுத்தப்பட்டோர் அமைப்பினர் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்கள் கடைகளையும் பெட்ரோல் பம்ப்புகளையும் அடித்து உடைத்ததால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.