தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் பாலாநகரில் அதிவேகமாக சென்ற கார் மின்கம்பத்தின் மீது மோதி தலைக்குப்புற கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கார் அதிவேகமாக சென்றதால் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் மொஹம்மது முஷ்டாக் என்ற இளைஞர் உயிரிழந்த நிலையில், காரில் இருந்து தூக்கி வீசப்பட்டவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.