பொய்யான வாக்குறுதிகளை அளித்து பீஹார் இளைஞர்களை தேஜஸ்வி முட்டாளாக்குவதாக முதல்வர் நிதிஷ் குமார் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், மாநிலத்தை 15 ஆண்டுகளாக கொள்ளையடித்தவர்கள் இப்போது இளைஞர்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதாகவும், அவர்கள் ஆட்சியில் இருந்த போது வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இப்போது, அதிகாரத்தின் மீது பேராசை இருப்பதாகவும், இதனால் தான் ஏமாற்றும் வகையிலான அறிவிப்புகளை வெளியிடுவதாகவும் சாடினார்.