மும்பையில் இருந்து அமெரிக்காவின் நெவார்க் நகருக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானம் நடுவானில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை அடுத்து மீண்டும் மும்பைக்கே திரும்பி வந்த து. இன்று காலை புறப்பட்ட AI 191 என்ற இந்த விமானம் பறந்து கொண்டிருந்த போது, அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டு பிடித்தார். அதனைத் தொடர்ந்து விமான கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு அவர்கள் அளித்த அறிவுரையின் படி விமானம் உடனடியாக மும்பைக்கு திருப்ப ப்பட்டு பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டு அவர்களுக்கு ஹோட்டல் அறைகள் ஒதுக்கப்பட்டதாக ஏர் இந்தியா அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விமான சேவை ரத்தானதாக அறிவிக்கப்பட்டு, பயணிகள் நெவார்க் செல்ல மாற்று விமானம் விரைவில் ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையும் படியுங்கள் : ஆட்சிக்கு வந்தால் சமூக பெண் பணியாளர்களுக்கு நிரந்தர வேலை