டெல்லியில் இருந்து பாட்னாவுக்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து டேக் ஆப் ஆன சில நிமிடங்களில் மீண்டும் டெல்லிக்கே திரும்ப வந்து தரையிறங்கியது. போயிங் 737-8 ஏ என்ற விமானத்தில் பயணித்த அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும், விமானம் முழுமையாக சோதிக்கப்பட்டு வருவதாகவும் அறிக்கை ஒன்றில் ஸ்பைஸ்ஜெட் தெரிவித்துள்ளது. மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு பயணிகள் பாட்னாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.