தலைநகர் டெல்லியில் காலை 9:04 மணிக்கு திடீர் நில அதிர்வு ஏற்பட்டதால் அச்சமடைந்த குடியிருப்பாளர்கள் வீடுகளை விட்டு அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர். ஹரியானாவின் ஜஜ்ஜார் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து டெல்லி மற்றும் என்சிஆரின் பிற பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் சுமார் 4.4 ஆக பதிவான நிலநடுக்கத்தின்போது மின்விசிறிகள் மற்றும் பிற வீட்டுப் பொருட்கள் குலுங்கியது.