இந்தியாவின் இஸ்ரோ, அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையங்களின் கூட்டு தயாரிப்பில் உருவான முதல் செயற்கைக்கோளான 'நிசார்', ஜி.எஸ்.எல்.வி. எஃப்-16 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இரண்டாவது ஏவுதளத்திலிருந்து இந்திய நேரப்படி சரியாக 5 மணி 45 நிமிடங்களுக்கு விண்ணில் ஏவப்பட்டது.