நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்களின் நகரமாகத் திகழும் ராஜஸ்தானின் கோட்டாவில் தொடரும் மாணவர்கள் தற்கொலை தொடர்பான வழக்கில் மாநில பாஜக அரசு மீது உச்ச நீதிமன்றம் பல கேள்விகளை எழுப்பி உள்ளது. கோட்டாவில் மட்டும் இப்படி தொடர்ந்து தற்கொலைகள் நடப்பது ஏன் என காட்டமாக வினவிய நீதிபதிகள், மாநில அரசு அதை தடுக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பினர்.