நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட கோரி மாணவர் தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு தேசிய தேர்வு முகமைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் தேர்வு மைய கண்காணிப்பு கேமரா காட்சிகள், இதர பதிவேடுகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். தேர்வு மைய நுழைவு வாயிலில் இருந்த பயோமெட்ரிக் சரிபார்ப்பு கருவி செயல்படாததால், தேர்வு தொடங்க 5 நிமிடம் இருக்கும் போது தான் உள்ளே அனுமதிக்கப்பட்டதாகவும், தேர்வு மைய சூப்பிரண்டுக்கு கடிதம் எழுத நிர்பந்திக்கப்பட்டதாகவும் இதனால், மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் மாணவர் புகார் தெரிவித்தார்.இதையும் படியுங்கள் : "மொழி அடிப்படையில் மக்களை பிரிக்க பாஜக முயற்சி"