இன்று காலை இறக்கத்துடன் ஆரம்பித்த பங்குசந்தை வர்த்தகம் ஓரளவு முன்னேறி ஏற்றத்துடன் நிறைவடைந்தது. மும்பை பங்குசந்தை குறியீடான சென்செக்ஸ் பூஜ்யம் புள்ளி 45 சதவிகிதம் அதிகரித்து 80 ஆயிரத்து 368 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்துக் கொண்டது.தேசிய பங்குசந்தை நிப்டி 24 ஆயிரத்து 466 புள்ளிகளில் வர்த்தகமானது. பாரத் எலக்ட்ரானிக்ஸ், எஸ்பிஐ,ஈச்சர் மோட்டார் உள்ளிட்டவற்றின் பங்குகள் விலை உயர்ந்தன. மாருதி சுஸுகி, டாட்டா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டார்கார்ப் நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன.