மராத்தி, பெங்காலி உள்பட மேலும் 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் தமிழ், மலையாளம், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, ஒடியா என ஆறு மொழிகள் செம்மொழி அந்தஸ்து பெற்றுள்ள நிலையில், மேலும் ஐந்து மொழிகள் செம்மொழி அந்தஸ்தை பெற உள்ளன. பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மராத்தி, பெங்காலி, பாலி, அசாமி, ப்ராகிரிட் ஆகிய 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கிட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், செம்மொழி அந்தஸ்து பெறும் மொழிகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.