இண்டிகோவின் ஆயிரக்கணக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு வரும் நிலையில், பயணிகளின் வசதிக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. போதிய பணியாட்கள் இல்லாததால், நாடு முழுவதும் தொடர்ந்து 6 வது நாளாக இண்டிகோ விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடுகளும் இண்டிகோ நிறுவனம் சார்பில் செய்யப்படாததால் பயணிகளின் வசதிக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்குவதாக ரயில்வே அறிவித்துள்ளது.