விரைவில் நக்சல் இல்லாத இந்தியா உருவாகும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற ஆங்கில ஊடக மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர், 2014-ல் 125 ஆக இருந்த நக்சல் பாதிப்பு மாவட்டங்களை தற்போது 11 மாவட்டங்களாக குறைத்துள்ளதாக தெரிவித்தார். சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தரில் முன்பு வாகனங்கள் எரிப்பு, பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டனர் என்ற செய்தி வரும் என தெரிவித்த மோடி, ஆனால், இன்று இளைஞர்கள் பஸ்தர் ஒலிம்பிக்கை நடத்துவதாக பெருமிதம் தெரிவித்தார். மேலும் கடந்த 75 மணி நேரத்தில் 300க்கும் மேற்பட்ட நக்சல்கள் சரண் அடைந்துள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார்.