திருப்பதி லட்டு தயாரிப்புக்கான நெய்யில் கலப்படம் செய்யப்பட்டதா என்பது குறித்த சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், மாநில அரசின் உத்தரவின்படி துவக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு நிறுத்தப்படுவதாக ஆந்திர டிஜிபி துவாரகா திருமலா ராவ் தெரிவித்துள்ளார்.