நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவான மிஸ் யூ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கடைசியாக சித்தார்த் நடிப்பில் உருவான சித்தா படம் நல்ல வரவேற்பை பெற்று, மிகப்பெரிய வசூலை ஈட்டியது. இந்த நிலையில், காதல் கதைக் களத்தை மையமாக வைத்து சித்தார்த் நடித்த மிஸ் யூ படம் நவம்பர் 29-ந் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், பெங்கல்புயல் எச்சரிக்கை காரணமாக மிஸ் யூ பட ரிலீஸ் தேதி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் 'மிஸ் யூ' படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.